காதலை மறக்காத ஞானம்

நிலவை மறக்காத வானம்
பெளார்ணமியானது.........


மலரை மறக்காத புயல்
தென்றலானது.......

மழையை மறக்காத பூமி
வளமானது.......


சூரியனை மறக்காத இரவும்
பகலானது.......



காம்பை மறக்காத இதழ்கள்
பூ வானது..........


என் காதலை மறக்காத ஞானம்
கவிதையானது........

எழுதியவர் : (1-Dec-13, 7:14 pm)
பார்வை : 93

மேலே