சொல்லாமல் கொல்லும் உன் வார்த்தை 555
பெண்ணே...
தொலைதூர பயணத்தில்
உன்னை சந்தித்தேன்...
உன்னை தொடர்ந்தேன்...
மனதால் உன்னை
மணந்தேன்...
உன்
வருகையை எண்ணி...
ஒவ்வொரு நாளும்
காத்திருந்தேன்...
என் ஆசையை உன்னிடம்
நான் சொல்ல ஏற்றாயடி...
பெண்ணே இன்று
சொன்னாயடி...
அழகிய
வார்த்தையில் ஒன்று...
நான் பட்டம்
பெற்றவள்...
நீ பள்ளியை
தாண்டாதவன் என்று...
உண்மைதானடி
பெண்ணே...
நீ உணர்ந்துதானடி
என் காதலை ஏற்றாய்...
இன்று மட்டும் ஏனடி...
சொல்லி இருக்கலாம்
நீ அன்றே...
என்னில் உன்னை
வரைந்து...
இதயத்தில் ஓவியமாக்கிய
என்னை சொல்லாமல் கொல்லுதடி...
உன் வார்த்தை போதுமடி
உன் பின்னால் வந்த எனக்கு...
நீ தந்த பரிசு
இது போதுமடி...
நான் மறையும் வரை.....