என்னில் ஜீவன் வாழுமா தெரியவில்லையடி 555
பெண்ணே...
நான் கோடைகால
மலர் செடியும் இல்லை...
வசந்தகால மலர்
செடியுமில்லை...
எப்போதும் பூக்கும்
மலராகவே இருந்தேனடி...
என்னிடத்தில் காதல்
என்னும் வார்த்தை சொல்லி...
எனக்கு சாபம்
ஒன்று தந்தாயடி...
பெண்ணே நீ தந்த சோகமும்
சந்தோசமும்...
என் வாழ்வில்
போதுமடி...
உதிர்ந்துவிட்ட மலராக
என் வாழ்வு...
புயல் வீசினால்
பறந்துவிடுவேனோ...
வெயிலில் காய்ந்து
போவேனோ...
தெரியாமலே
உதிர்ந்துவிட்டேனடி...
உன் வசந்த வாழ்வை
காணும்வரை...
என்னில் ஜீவன்
வாழுமா தெரியவில்லையடி...
பெண்ணே
காத்திருகின்றேன்...
மண்ணோடு மண்ணாக
உன் நினைவிலேயே.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
