சரிவுகள் எல்லாம் வீழ்ச்சிகளல்ல

கோடிகள் கடன்வாங்கி
வெற்றிப் படமாக
அழகாய் பூஜை போட்டு,
பலரின் உழைப்புடன்
மாதக்கணக்கில்
செதுக்கி செதுக்கி
படம் எடுப்பான் ஒருவன்...!
ஏப்பம் விட்டபடி,
மணித்தியாலத்தில்
இணையத்தில்
அதைப் பார்த்து
ஒற்றை வார்த்தையில்
`மொக்கைப் படம்` என்பான்
சொகுசாக இன்னொருவன்..!
நிலை இறங்கிப்போக
நிழலும் மிதிக்கும் காலத்தில்
வாழ்க்கை மாறிவிடும்
சில கணப்பொழுதுகளில்....
உலை வாயை மூடினாலும்
ஊர் வாயை மட்டும்
எப்போதும் மூட முடிவதில்லை..!
ஒற்றுமையின் கைகோர்ப்பில்
ஒரு சிறு மாற்றம்
ஏற்பட்டால் போதும் .......
அத்தனையும் இயல்புக்கு வந்துவிடும்
சாண் ஏற முழம் சறுக்கியது
சாகா வரம் பெற்றுவிடும்
சரிவுகளை மலை உயர்வாக்கி ..!!!