ஏதிலார் குற்றம்போல்

நுரைத்துச் சுழித்தோடும்
நதிகளெல்லாம்
எதிர்க்கும் பாறைகளை ,
மோதி வெற்றிகொள்ளவதில்லை .
குற்றம் கூறிக்
காலத்தை விரயம்
செய்வதில்லை .
அடுத்த மணித்துளியில்
பாதை வகுத்துப்
பாய்ந்தோடும் நீரோட்டம்.
மண்ணுயிர்களின்
வளம் ஒன்றுதான்
நோக்கம் ....எனும்போது
எதிர்பென்றால் குறைசொல்லி
ஏதிலார் குற்றம் காணும்
இறைவனின் மைந்தர்களே!
ஒன்று ......
எதிர்பார்பைக் குறுக்கலாம்
அல்லது
எதிர்ப்பை இணக்கமாக்கலாம்.
"அந்த நதியைப் போல "