காதல்

உன் நஞ்சு கலந்த கெஞ்சல்களில் கொஞ்சம்கொஞ்சமாய்
என் நெஞ்சம் தஞ்சமடைய, விழுந்து விட்ட என் இதயம்
பழுது பட்டு போனதடி பாவை உன் பார்வை பட்டு,
காணும் இடமெங்கும் கவிதையாய் உன் முகம்,
கவிழ்ந்து படுத்தால் கனவிலும் உன் முகம்,
நினைத்து நினைத்து ஏங்க வைத்து தவிக்க விடும்
உன் குறும்பு பார்வை - என்னதான் இயன்றாலும் இயலவில்லை
உன் நினைவுகளை துரத்த.....
இயம்பிதான் விடேன் விரைவில் ..விரும்பவில்லை என்றாவது..

எழுதியவர் : அருள் ராஜகோபால் (26-Jan-11, 5:18 pm)
சேர்த்தது : Arul.Rajagopal
Tanglish : kaadhal
பார்வை : 393

மேலே