மனத்தின் எண்ணம் உன்னை கண்ட பின்

நிலவை பிடித்து விட்டுனுள் அடைத்து
கண்ணாமுச்சி ஆடும் உள்ளம்
விண்மினை எல்லாம் கை நூலில் சேர்த்து
ஓவியம் படைக்கும் சின்னச்சிறு காவிய மனம்.

ஓயாமல் அழுது..அதில் வரும் ராகத்தை
ரசிக்கும் குழந்தைத்தனம்..
நீண்ட நேரம் மழையில் நனைந்த பின் - தலையை
அசைத்து சிலுப்பும்...மலரின் சுகம்.

எல்லாம் தொலைந்து போனது
உன்னை கண்ட மாத்திரத்தில்...
உள்ளத்தை களவு செய்து... சித்ரமாய் நடக்க செய்து,..
காட்சி பொருளாக மாற்றி விட்டாய் என்னை !!!

உன்னை குறை கூறவில்லை...
உன்னை குறை இல்லாமல் படைத்த கடவுளை தேடுகிறேன்..
நீ மட்டும் ஆழகு என்று எனக்கு தோன்றவில்லை....
உன்னை எல்லா பொருட்களும் பிரதிபலிப்பதால் !!!

இனி என்ன நடக்குமோ ஏது நடக்குமோ ?
நினைவின்றி சிந்தனையன்றி பயணிக்கிறேன்
பயணத்தின் முடிவில் நீ என்னுடன் இருப்பாய் என்ற நம்பிக்கையில்.

தொலைதூர பயணம் என்றாலும்,.. தோள் கொடுக்க நீ இருப்பதால்
தூரத்தின் அளவை நீடிக்க சொல்க்கிறேன்.
நீ வேண்டும்... நீ மட்டும் வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்
வாழ்கையின் அழகை ரசிக்க.... ருசிக்க....

என் நிழல் ஆக.....நீ ஆக வேண்டாம்...
நான் ஆக நீ அகி விடு....
நிழல் ஒன்றாக நிஜம் ஒன்றாக நம்மை,
பிரிக்க மனம் இல்லை எனக்கு.

எழுதியவர் : தங்கம் (2-Dec-13, 12:42 pm)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 121

மேலே