உறுப்பு தானம் உயிர் காக்கும்

உயிர் தந்தது தாய் என்றால்,
நாமும் தாயாக,
ஒரு வாய்ப்பு,

உயிர் தந்தது இறைவன் என்றால்,
நாமும் இறைவனாக,
ஒரு வாய்ப்பு,

போன உயிரை காப்பாற்ற,
இறைவனாலும் முடியாது,
போக போகும் உயிரை காப்பாற்ற,
நம்மால் முடியும்,

உடலுக்கு எரியூட்டி,
சாம்பலாய் போவதை விட,
மண்ணுக்குள் புதைத்து,
மண்ணாய் ஆவதை விட,
பிறர் உடலுக்கு,
உயிர் தந்து உயிரோடு வாழலாமே,

தானம் தருவதற்கு கூட,
நாம் தகுதி அற்றவர்கள் தான்,
இனாமாய் வந்த உடல்,
இறந்த பிறகு,
யாருக்காவது உதவட்டுமே,
நாம் பார்த்து ரசித்த உலகை,
நம்மால் யாராவது பார்க்கட்டுமே,

வாழும் பொழுது,
நான் யாருக்கும் பயனில்லாமல்,
வாழ்ந்தேன் என்ற,
குற்ற உணர்ச்சியோடு,
சாவதை விட,
என்னால் நான்கு பேர்,
வாழ்வார்கள் என்ற,
சந்தோசத்தில் சாவது மேல்,

மதமும் அழியும்,
மனிதாபிமானமும் தலைக்கும்,
இந்துவின் இதயம்,
இஸ்லாமியரிடம் துடிக்கும் போது,

குடும்பத்தார் அனுமதி இல்லை என்று,
இறந்த பின்பும்,
பிணமாய் அவர்களோடு,
இருக்கவா போகிறோம்,

இறந்த உடன் உறவே,
நம்மை மறந்து போகும்,
ஆனால்,
நம்மால் உயிர் வாழும்,
ஒவ்வொரும் ,
அவர்கள் வாழும்,
காலம் வரை,
நம்மை நினைத்து வாழ்வார் ,

தர்மம் தலை காக்கும் என்றால்,
உறுப்பு தானம் பிறர்,
உயிர் காக்கும்,

எழுதியவர் : கார்த்திக் (2-Dec-13, 3:59 pm)
பார்வை : 179

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே