இறக்காதே இறுதிமுன்
இட்டு விட்ட வேலை இன்னும்
இருநூறு ஆயிரம் இருக்கையில்
இருட்டு வழி போனதென்ன
இரும்பு நெஞ்சம் கொண்டவனே
தாலி கட்டிய பின்னே
தன்னுயிர் இனி இரண்டு
தத்தெடுத்தாலும் பெத்தெடுத்தாலும்
தடையில்லாது காக்கணும் உருண்டு
மூத்தவளுக்கு என் மூளை
முனைப்பாய் செய்வதில் என் அன்னை
முச்சந்தியில் நின்றுரைப்பாய்
முழுதாய் அவள் பெற்ற மதிப்பெண்ணை..
இன்று வரை யாரும் இவனை
இடையூராய் பார்த்ததில்லை
இன்றை வரை இஷ்டமாய்
இருக்கிறான் இரண்டாவதானவன்
பேசும் விழி கொண்ட இவள்
பேதை போல் அன்புறைப்பாள்
பாசம் மட்டும் பழக்கம் அவளுக்கு
பாராமல் விட்ட இடையவள்
தனுசு போல் நின்றுரைப்பான்
தன்மையுள்ளம் கொண்ட இவன்
தகப்பன் தோள் தளர
தொடாத இளைய மகன்
தீங்கிற்கும் தீங்கறியா
தாயுள்ளம் கொண்டவள்
தன்னுடன், தங்கமெல்லாம் தாரவார்த்த
தாவரபட்சினி
இரண்டடி கூட இருக்க இல்லாமல்
இருப்பவர்கள் நிறைய இந்த நாட்டில்
இந்த ஐந்து உயிர் உனக்கிருக்க
இவருடன் இனி நான் இல்லை என்று நீ நினைத்தாயோ
நாற்புரமாய் நான்கு பேர்
நடந்து செல்வார் என்றறியா
நமன் பின்னே ஓடி போய்
நால்வரின் மேல் சென்றாயே
தேடி சென்று அடையும் செல்வத்தை
தேடாமல் விட்டு விட்டு
தானே வரும் சமயத்தை
தேடி நீ சென்றாயே
செல்ல மடி அமர்த்தி முத்தம் தந்து
சொல்லவேண்டிய பல பாடங்களை
சங்கு பிடித்தி குலுக்கி கதரவைத்து
சொல்லியது காலம்
இது விதி என எடுத்து கொள்ள
இயலாது அவர்களுக்கு
இயன்றவரை இறைவனை நினைக்கிறோம்
இனியாவது இறக்காதே இறுதிமுன்..