படித்த சிரிப்புகள்
காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன் கல்லறை என்றாள்…..
கல்லறை போக பாதை கேட்டேன் என்னை காதலி என்றாள்……..
*************************
பசங்க உள்ளம் ஒரு கோவில்.அதனால்தானோ என்னவோஅவன் “ஐ லவ் யூ…”
சொல்லும்போதெல்லாம் அவள் செருப்பைக்கழற்றி விடுகிறாள்…
*************************
பல்ப்பை கண்டுபிடிச்சது – எடிசன்
ரேடியோவை கண்டுபிடிச்சது – மார்க்கோணி
பைசிக்கிளை கண்டுபிடிச்சது – மேக் மில்லன்
போனைக் கண்டுபிடிச்சது – க்ராஹாம் பெல்
எக்ஸ்சாமைக் (EXAM) கண்டுபிடிச்சது ….??????
அவன் தான் சிக்கமாட்டேன்கிறான்….. சிக்கினா .. செத்தான்…..
***************************
அவள் கண்கள் பேசிய வார்த்தை புரிந்த எனக்கு….
அவள் உதடு பேசிய வார்த்தை புரியவில்லை……
படுபாவி மூச்சு விடாம ஆங்கிலம் பேசுறாள்….
***************************
அவள் என்னை திரும்பி பார்த்தாள்….
நானும் அவளைத் திரும்பி பார்த்தேன்…அவள் மறுபடி பார்த்தாள்….
நானும் அவளை மறுபடி பார்த்தேன்….
அந்த பரீட்சை மண்டபத்தில் இரண்டு பேருக்கும் தெரியல விடை !