நிராயுதபாணி

கொஞ்சம்
பின்னோக்கி பார்கிறேன் ......
இனிய பாடல்கள் ,
என் காதல்,
என் கவிதை,
நளினமான என் நடனம்,
அழகிய நட்பு,
நான் வரைந்த ஓவியம் ,
பிடித்த புத்தகங்கள்,
இவற்றுடன் ...
"என்னையும்"
காணவில்லை - என்
குடும்பத்தின் முன்.

வெளிச்சம் இருக்கும்
இடத்தை விட்டு,
தொலைத்த இடத்தில்
தேடலாம் என்று
பின்னோக்கி
பார்த்தால் ..
பார்வைக்கு எட்டிய
தூரம் வரை
குழந்தைகளின்
நினைவே .


யாரும் கட்டுபடுத்த வில்லை ,
நேரமும் பற்றாக்குறையில்லை,
என் உலகத்தை விட்டு
என்னையும் அறியாமல்
வெகுதூரம் வந்துவிட்டேன்.

நின்ற இடத்தில்
நிமிர்ந்து பார்த்தால்,
நிராயுதபாணியாய் - என்
நினைவுகள்.

- லக்ஷ்மி பாலா .

எழுதியவர் : மா லட்சுமி பாலா (2-Dec-13, 6:35 pm)
பார்வை : 141

மேலே