விதியின் அகோரம்

விதியின் அகோரப் பிடியில்
சிக்கித் தவிக்கும் மானிடனே!
மாளும் வரைப் போராடு வாழ்வா சாவா ?
விதியை மதியால் வெல்லலாமென்று
வீர வசனம் பேசி மார்தட்டிக் கொள்ளாதே !
விதி என்று வந்து விட்டால்,
மதி கூட மறைந்து கொண்டு
சந்தியில் நின்று சதிராட்டம் போடும்.

நாலு பேரை வைத்து வாய் கிழியப் பேசும்,
வாய்க்கால் வரப்பில் தள்ளாடச் சொல்லும்,
ஒட்டுத் துணியின்றி ஓட ஓட விரட்டும்,
சும்மா நடந்தாலும் விழச் சொல்லிப் பார்க்கும்,
கோடீஸ்வரனையும் பிச்சையெடுக்க வைக்கும்,
பாமரனைக் கூட நாடாள வைக்கும்!

மனைவியும் கூட வார்த்தையால் கொல்வாள்,
பிள்ளைகள் வீட்டை விட்டே துரத்துவர்,
கோடிகள் சம்பாதித்தவன் தெருக்கோடியில்.
விதியுன்னை நெருக்கித் தள்ளுமுன்னே,
அதை தெரிந்து கொள்ள முயற்சியெடு.
வாழ்வில் தெரிந்து கொண்ட விதியை
நாளும் ஜெயித்து விடப் பயிற்சியெடு!!!


......................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (2-Dec-13, 8:11 pm)
பார்வை : 113

மேலே