கொடுத்து விடு
கண்ணுக்கு தெரியாமல்
புகுந்தது...
கட்டி வைத்திருந்ததை
அவிழ்த்தது...
பிரகாசிப்பது தெரியாமல்
புரட்டியது...
கடத்திச் சென்றது
ஏனோ?
தெரியவில்லை...
சோலையிலே மாலை
கோர்க்கின்றாயா?
பாலையிலே ஓலை
காய்கிறது...
அமைதி நிலவுகிறதா
அங்கு?
அலைகிறது நிசப்தங்கள்
யாவும்...
கொள்ளை கொண்டது
நீயே...
கொள்ளை அடித்த
கொள்ளைக்காரி...
கொன்று விடாதே!
தயவுசெய்து,
திருப்பிக் கொடுத்துவிடடி
உயிரை...