ஆடல் காணீரோ
ஆடல் காணிரோ
திரு விளையாடல் காணிரோ
இன்று நடக்கும் ஆட்டம் காணிரோ
அரசியல் ஒரு சூதாட்டம்
அங்கு தலைவர்களும் கட்சிகளும்
ஆடும் வெறியாட்டத்தை காணிரோ.
வர்த்தகம் ஒரு களியாட்டம்
இதில் பங்குச் சந்தையிலும் தொழிலும்
நடக்கும் தில்லு முல்லு ஆட்டத்தைக் காணீரோ.
கல்வி ஒரு சதிராட்டம்
இங்கு படிப்புக்கும் ஆசிரியர்கள் பணிக்கும் விலை
பணத்தின் பேயாட்டத்தைக் காணீரோ.
மக்கள் பாடு திண்டாட்டம்
எதற்கும் காசு என்ற நிலை நிடடிக்கும் அவதி
சாமானியனை ஆட்டிப் படைக்கும் ஆட்டத்தைக் காணீரோ