மாற்றான் தோட்டத்து மல்லிகை

அருகாமையில் நறுமணம்
நாசி துலைக்க வேலித் தாண்டி
மாற்றான் வீட்டில் கால் பதித்து
மலர்ந்த மல்லிகையை
கண்டு ஆசைக் கொண்டு
நாம் அள்ளிக் கொள்ள நினைத்தால்
அவன் காக்கும் மலரில்
நாமும் உரிமைக் கொண்டால்
நெறியே உயிர் என்று
நம் முன்னோன் வளர்த்த
தமிழ் மரபை நாம் அழித்தோம் என்று
நம் பின்னால் வரும் சந்ததிகளின்
வெள்ளை மனதில்
அழுக்காக நாம் இருப்போம்!!!!!!
(மலருக்கு மாது என்ற பெயரும் உண்டு)

எழுதியவர் : சூர்யாநரேஷ்குமார் (3-Dec-13, 7:04 pm)
பார்வை : 243

மேலே