அவள் முகம் அழகு

சிவந்த உதடுகள் சிரித்திட
உறைந்து போகும் உதிரம் எனது .
சட்டென்று கோபம் கொள்ளும்
அவள் கன்னங்களில் சேரும் ரோஜா அழகு...
இதழ் பேசும் வார்த்தைகள் புரிகிறது;
ஏனோ இவள் கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை.
வளைந்த புருவங்கள் வளைக்கிறது என்னை
அவள் விழிகளுக்குள் ....
தலைவார்த்த கூந்தலும் கலைகிறது -காற்றில்.
முகம் பார்த்த கூந்தலை விளக்கும் விரல்கள் நானோ.
நெற்றியின் மத்தியில் குடியிருக்கும் நிலவு -பிடிக்கும்.
என் உயிர் துடிக்கும் சத்தம் உன் இடப்பக்க இதயம் சொல்லும்...
ஒரு உயிருள்ள சிலையை கண்டு
நானும் உயிருடன் சிலையானேன்.
அந்த ஒரு சில நொடிகளில்...அழகு
அவள் முகம் அழகு ....

எழுதியவர் : குமார்ஸ் (4-Dec-13, 2:02 am)
சேர்த்தது : kumars kumaresan
Tanglish : aval mukam alagu
பார்வை : 10228

மேலே