காதலென்னும் சோலையினில்16
ராஜசேகரன் குடும்பத்தினர் உள்ளே நுழைந்தனர், கவிதா புது இடம் என்பதால் சற்று பதற்றத்துடன் இருந்தாள். அந்த இரு பெண்களும் வந்தனர் அதில் ஒருத்தி இதுதான் உன் மருமகளா பார்க்க அழகாகத்தான் இருக்கிறாள் ஆனாலும் பிச்சைக்காரி மாதிரி நகை எதுவும் போடாமல் உன் வீட்டுக்கு ஏற்றவள் மாதிரியே இல்லையே என்று வெறுப்பேற்றினாள்... அதிலிருந்து கவிதாவுக்கு புரிந்தது அத்தை எதுவும் பேசவில்லை, கூட இருக்கிறவள் தான் சகுனி மாதிரி வெறுப்பேற்றுகிறாள் என்று மனதிற்குள் நினைத்து அவளுடைய பேச்சைக்கேட்டு கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது ஆனால் அதை வெளியில் காட்டாமல் நின்றாள்................................
ராஜசேகரனின் அம்மா சீதா; வாப்பா எப்டி இருக்கா வாம்மா என்று கூப்பிட்டாலும் மனதார உபசரிக்கவில்லை. பிள்ளையை எடுத்து விட்டு நீ போமா குளிச்சிட்டு வா குழந்தையை நான் பார்த்துக்குறேன் என்றாள், கவிதாவும் சரி என்று சொல்லி விட்டு ராஜசேகரனை பார்த்தாள்.
அவன் அவளை மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்...........
அவர்கள் தான் என் அம்மா; பாவம் தான் ஆனால் நான் இப்படி செய்து விட்டேன் என்று என்மீது கோவம் அவ்ளோ தான் போக போக சரி ஆகிவிடும், கூட இருப்பது என் அத்தை; தாராவின் அம்மா அவங்களுக்கோ நான் அவர்கள் மகளை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கோவம் அதற்காகத்தான் இப்படி உன்னை மறைமுகமாக பேசுகிறார்கள் நீ எதையும் மனதில் வைத்து கொள்ளாதே.
உன் அப்பா 11மணிக்கு இந்த தொலைப்பேசிக்கு அழைப்பார் நீ எடுத்து பேசு அவர்கள் மனது சங்கடப்படாதவாறு பேசு, நான் கீழே வெயிட் பண்றேன் சாப்பாடு நேரம் அனைவரும் சேர்ந்து தான் சாப்பிடுவது வழக்கம் சரியாக 1மணிக்கு கீழே வந்து விடு என்று சொல்லி விட்டு அறையை விட்டு கிளம்பினான்...........
அவள் ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை, அப்போது அவளுடைய அப்பா தொலைப்பேசியில் அழைக்கவே நலம் விசாரித்து விட்டு அப்புறம் பேசுகிறேன் அப்பா என்றாள் சரிம்மா எதுனாலும் அவர்கள் மனம் வருந்தும் படி செய்து விடாதே பிறகு வளர்ப்பு சரி இல்லை என்று சொல்வார்கள், நேரம் கிடைக்கும் போது நானும் அங்கு வந்து சந்திக்கிறேன் என்று சொல்லவே சரிப்பா உங்க பேரை நான் கெடுக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்தாள்.............
குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வெளியே வந்தாள். ராஜசேகரனுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னானே அவளை காணோமே என்று யோசனையுடன் கீழே வந்தாள்,....
அங்கு குட்டிராஜாவுடன் கொஞ்சிக்கொண்டிருந்தார் ராஜசேகரனின் அம்மா. அவளுக்கோ பேரனை ரொம்பவும் பிடித்து விட்டது. இவள் கீழே வரும் போது ராஜசேகரனின் அத்தை கிளம்பிவிட்டாள்...
வாம்மா என்று அத்தை அழைத்ததும் அருகில் சென்றாள் பையனுக்கு வேறு ஏதாவது கொடுக்கணுமா என்று கேட்டாள் பிஸ்கட்டும் பாலும் போதும் அத்தை என்றாள்.................
மருமகள் எப்படியோ என்று அத்தை நினைக்க! அத்தை எப்டியோ என்று மருமகள் நினைக்க இன்னும் கொஞ்ச நேரத்தில் இருவரும் புரிந்து கொள்வார்கள் என ஹாலில் உட்கார்ந்திருந்த ராஜசேகரன் நினைத்து கொண்டான்,, குழந்தை தூங்கி விட்டான் படுக்க வைத்து விட்டு வருகிறேன் அப்புறம் சாப்பிடலாம் என்று சொல்லி விட்டு குழந்தையை கொண்டு சென்றாள் ராஜசேகரனின் அம்மா அவர்களை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராஜசேகரனும், கவிதாவும்..............
மறுபடியும் அவர்கள் வீட்டிற்கு வருகிறாள் தாராவின் அம்மா கூடவே ஒரு பொண்ணும் வருகிறாள் அவளை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் கவிதா........................... அடுத்து என்ன குண்டு வைக்க போறாங்களோ ராஜசேகரனின்அத்தையம்மா?????????