மனதை வளமாகும் பொன்மொழிகள் 07

வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.

*****************
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.

****************-
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.

******************
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.

*******************
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
******************
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (4-Dec-13, 4:51 pm)
பார்வை : 159

மேலே