இது நவீன உலகம்
அன்றெல்லாம்
கூப்பிடும் தூரத்தில்
பக்கத்து வீட்டாருடன்
நட்பு பகிர்ந்தோம்…..
தெருவில் நடக்கையில்
வணக்கங்களும்
அம்மா சொகமா…?
அய்யா சொகமா…? என
அன்பு விசாரனைகளும்
செல்போன் இல்லை…
பேஸ்புக் இல்லை…
இருந்தும் அஞ்சல் அட்டை
நம்மை இணைத்தது…
இன்றைக்கெல்லாம்
சுற்றம் மறந்து – கூட்டத்திலும்
தனியாகி விடுகிறோம்
கூட்டம் கூட்டமாக…
இது நவீன உலகம்.