வானுயர ஒர்மலையாய்

வானுயர ஓர்மலையாய் வளர்ந்திருந் தேன்நான்
வீசும் தென்றல் ஏனோ என்மேல்
பூசிச் சென்றது புழுதிப் படலம்
பருவம் மாறப் பொழியும் மழையில்
நனைந்த மேனி குளிர்ந்தது கண்டு
நிமிர்ந் தெழுந்தது எந்தன் நெஞ்சம்
காலம் கடக்க குலைந்த என்மேனி
பொழிந்த மழையில் கரைந்தது கண்டு
காற்று வந்து புழுதியை மீண்டும்
பூசிச் சிரித்தது புன்னகை பூத்து