குத்துக் கல்லே குத்துக் கல்லே

குத்துக் கல்லே குத்துக் கல்லே
எப்படி நீயும் இங்கே வந்தாய்
என்று எனக்கு சொல்லிடு வாயா
குத்துக் கல்லே குத்துக் கல்லே
ஒவ்வொரு நாளும் இங்கே வந்து
உன்னைப் பார்க்கும் பொழுது எல்லாம்
என்மனம் கவலை கொள்வதும் ஏனோ
குத்துக் கல்லே குத்துக் கல்லே
நிலையாய் நிற்க நினைக்கும் உன்னை
அலைகள் வந்து மோதும் போது
உன்மனம் என்ன நினைக்கும் என்று
எனக்குத் தெரிய வாய்ப்பும் இல்லை
இரவும் பகலும் தனிமையில் நிற்க
தவழும் அலையுன் கால்ளைப் பற்றி
காதல் மொழிகள் கூறுவ துண்டோ
குத்துக் கல்லே குத்துக் கல்லே
ஆர்ப்பரிக்கும் அலைகள் உப்புத் தண்ணீர்
நாளும் பொழுதும் காலில் பட்டால்
கரைந்துன் கால்கள் திடமும் இழக்க
வீழ்த்திடும் உன்னை மெல்ல மெல்ல
என்றே என்மனம் கொண்டது கவலை
குத்துக் கல்லே குத்துக் கல்லே