நீ தான்

நீ தான்
அடித்து கொண்டு பெய்யும் மழையில்,ஜன்னல் ஓரம் நின்று தென்றல் சாரலை ரசிக்க வைத்தது நீ தான்
ஓவென இரையும் அலைகளின் இரைச்சலில்,மெல்லிய சங்கீதம் இருப்பதை ரசிக்க வைத்ததும் நீ தான்
பல பூக்கள் நடுவே,ஒற்றை ரோஜா இருப்பதை ரசிக்க வைத்தது நீ தான் ,
கனவில் மட்டும் உன்னை கண்டு,நிஜத்தில் உன்னை தேட வைத்ததும் நீ தான்,
இப்போது உன் மேலான என் காதல் தோல்வியுற்ற போதும்,நினைவுகள் தரும் வலியோடு வாழ கற்று கொடுத்ததும் நீ தான் ….
வலிகளுடன்
உன் நினைவுகளுடன்
நான் ...