முதல் காணலிலே
உனது முகம் தேடி... எனது விழிகள் சுழலுதடி.
உன் வருகை இலது... என் மனது வாடுதடி.
நெற்றிப்பொட்டின் அழகைக் கண்டேன்
எந்தன் கண்கள் குளிர்ந்ததடி
இதுதான் நிலவோ
இதுதான் நிலவோ என்று
எண்ணத் தோன்றுதடி...
கூந்தல் அடர்வில் அருவியைக் கண்டேன்
எந்தன் நெஞ்சம் நனைந்ததடி
அந்தச்சாரல்
அந்தச்சாரல் என்றும்
நிலைக்க வேணுமடி...
முத்துப்பற்கள் சிரிப்பைக் கண்டேன்
குயிலின் குரல் கேட்குதடி
அந்த ஓசை
அந்த ஓசை என்றும்
மனது வேண்டுமடி...
உனது முகம் தேடி... எனது விழிகள் சுழலுதடி.
உன் வருகை இலது... என் மனது வாடுதடி.