மின்னுவதெல்லாம் பொன்னாகும் என்ற பொறுமை வேண்டாம்
இயற்கையின் தாய்ப்பால் மழை
மேகமோதலில் வானன்னையின்
கருத்தரிப்பு இம்மழைத்துளி
மழை மண்சேரு முன்னும்
மண்ணை சார்ந்த பின்பும்
தன் வரவை ஒளிபரப்பும்
வித்தையே மின்னல்..!
தன் உயிர்ப்பை உறுதிப்படுத்தும்
மின்னஞ்சலே இடி
மழையை இருகரம் நீட்டி
ஆராததித்தாலும்
மின்னலை கசந்தும்
மறுக்கும் மனது
வந்தபின் வருந்துவதை விட
வருமுன் காப்பதே வேள்வி..!
முழுதாய் முடியாவிட்டாலும்
எம்மளவில் எளிதாய்
கடைப்பிடிப்போம்
பாதுகாப்பினை உறுதியாக்குவோம்
மின்னல் இசை மீட்கையில்
வயல்வெளி கடற்கறை படகு
தனித்த மரம் தனிப்பட்ட கட்டிடம்
குளம் குட்டை
நீர் நிறைந்த வாவி அருகில்
நிற்றலை தவிர்த்தல்
பாதுகாப்பினை வலுப்படுத்தலாகும்
தலைமுடி கழுத்துபகுதிமுடி
செங்குத்தாக சிலிர்ப்பதை
உணர்ந்திட்டால்
மின்னல் ராஜாவின் வரவேற்பு
இதுவென மதித்து
பாதுகாப்பான கட்டிடம்
நாடலாம்...!
இல்லையேல்
இருகால்களையும் நெருக்கி வைத்து
உடம்பை குறுக்கி
சுருண்டு உடகாரலாம்
மின்னல் வீணை மீட்கையில்
மொட்டை மாடிகளை
முற்றாக தவிர்த்திடல்
சாலச் சிறந்தது...!
மின்கம்பி தண்ணீர்குழாய்
அருகில் நின்று
நியாயப்படுத்தல்
தவறானதாகும்...!
தரையன்றி மர
நாற்காலிகளை
ஆசனமாக்கிட ஆவனஞ்
செய்திடல் அறிவுடைமை...!
மின் இணைப்பின்
துண்டிப்பினால்
மின் கருவிகளின்
உடன்கட்டை ஏறலை
மறுத்திடலாம்...!
வந்தபின் வருந்தி
வாதாடுவதை விட
வருமுன் எம்பக்க
பாதுகாப்பினை வலுப்படுத்தலாம்
ஏன்னெனில்
மின்னுவதெல்லாம் என்றும்
பொன்னாவதில்லை.....!!!