விசுவாசம்
கவிதா நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். கவிதாவிற்கும் கார்த்திக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணமானது.கவிதா ஜானகி மற்றும் சுவராஜ்ற்கு ஒரே மகள்.செல்லப் பிள்ளை.எதையும் யாரிடமும் பங்குபோட்டதே இல்லை.அனைத்தும் அவளுக்கே முழுமையாக கிடைத்தது (அன்பு,பாசம்).வந்த ஒரு வாரத்தில் இருந்தே முடிவு செய்துவிட்டாள் மாமனார், மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், கணவரின் அன்பும் பாசமும் நமக்கே கிடைக்க வேண்டும் என்றும்,வீட்டில் அவள் ஆட்சி நடக்க வேண்டும் என்றும்.பல திட்டங்கள் போட்டாள் ஒருவழியாய் அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டாள்.வாரங்கள் உருண்டோடின,தான் நினைத்தபடியே ஆட்சியும் செய்தாள்.ஆனால் வீட்டு வேலைகளை அவளே செய்ய வேண்டியிருந்தது.ஒரு நாள் கடைவீதிக்குச் சென்று காய்கறி வாங்கிவிட்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.பணப்பையையும் கூடையிலேயே வைத்திருந்தாள்.இதைப் பார்த்த ஒருவன் வேகமாக வந்து கையில் இருந்த காய்கறி கூடையை பிடுங்கி ஓட ஆரம்பித்தான்.கவிதா சத்தம் போட அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவனை பிடிக்க ஓடினார்கள்.சிறிது நேரம் கழித்து வந்து அவன் தப்பிவிட்டான் என்றனர்.கவிதா என்னசெய்வதென்றே தெரியாமல் அழுது கொண்டே இருந்தாள் காரணம் விட்டுப் போனது பணம் மற்றும் காய்கறி மட்டும் அல்ல,கணவன் ஆசையாய் வாங்கி கொடுத்த தங்க சங்கிலியும் தான்.கடைவீதி செல்லும் முன்பு முன் ஜாக்கிரதை யாரவது அறுத்து விடுவார்கள் என்று கழட்டி பையில் வைத்து இருந்தாள்.அழுது கொண்டே வீட்டை அடைந்தாள்.கணவனுக்கு தொலைபேசி கூட செய்ய முடியவில்லை. காரணம் தொலைபேசியும் அத்துடனே தொலைந்துவிட்டது.தலையில் கை வைத்தபடியே வாசற்படியில் அமர்ந்தாள்.தூரத்தில் ஒரு நாய் வாயில் கூடையை கவ்விக்கொண்டு கவிதாவின் காலடியில் வைத்தது.கவிதாவிற்கு ஒரே ஆச்சிரியம் காரணம் தொலைந்த அனைத்துமே கிடைத்துவிட்டது. மனதிலே சின்ன யோசனை.......ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் மீதம் இருந்த ஒரு கிண்ண சாப்பாட்டை தெருவில் சுற்றிக்கொண்டு இருந்த நாய்க்கு போட்டாள்.அந்த நாய் தான் இது.தான் போட்ட ஒரு கிண்ண சாப்பாட்டிற்கு விசுவாசமாய் திருட்டுபோன பொருளை மீட்டுக்கொடுத்த நாயை பார்க்கும் போது கவிதாவிற்கு வெட்கமாய் இருந்தது.ஒரு வேளை சாப்பிட்ட நாய்க்கு இவ்வளவு விசுவாசம் இருக்கும் போது இருவத்தைது வருடங்களாய் தன கணவனை வளர்த்து ஆளாக்கி,வேண்டியவற்றையெல்லாம் செய்து,தங்களுக்கு இல்லாவிட்டாலும் மகனுக்காக அனைத்தும் இழந்த தாய் தந்தையருக்கு நாம் செய்தது நாயமா?????என்று நினைத்துக் கொண்டே வீட்டைக்கூட திறக்காமல் நேராக முதியோர் இல்லம் சென்று இருவரையும் கணவன் வருவதற்கு முன்பே அழைத்து வந்தாள்.