தனிமை

நீண்ட பகலும் மிக நீண்ட
இரவுகளுமாய் நீளும் என் தனிமை.
மூடிய கதவுகளை முட்டி மோதி
மாறி மாறி நுழைகிறது
பகலும் இரவுகளும்.

திறந்த ஜன்னல் வழி நுழைந்த காற்றும்
அனலாய் அலைந்து திரிகிறது
தனிமை புலம்பலில்.
கரும் போர்வை போர்த்திய
இருளாய் கனவிலும்
நிறைகிறது தனிமை .
.
நகராப் பொருட்களின் நடுவே
நகரும் பொருளாய் நகர்கிறேன்
தொலைத்த என் சுயம் தேடி.

மனத்துள் சிக்கித் தவிக்கும்
சிக்கல்கள் அகற்றி
பற்றிக் கிடக்கும் ஒட்டடை
நீக்கி ஆழத்தில் மிக
ஆழத்தில் ஈனஸ்வரத்தில்
உருக்குலைந்து உலர்ந்து போய்
தாகத்துடன் நான் !

ஒரு புன்னகைக்கும் முத்தத்திற்குமான
பாலைவனப் பயணத்தில்
பாதையெங்கும் படர்ந்திருந்த
முட்கள் கீறிய என் இதயத்தின்
உதிரத்தால் தாகம் தணிகிறேன். !

பின்கட்டு மாமரத்தின் ஒற்றைக் காகமும்
தனியே கரைகிறது வெகுநேரமாய்

எழுதியவர் : thilakavathy (8-Dec-13, 12:53 pm)
Tanglish : thanimai
பார்வை : 136

மேலே