உள்ளத்தில் ஹைக்கூ
உள்ளத்தில் ஹைக்கூ கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?
எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்
எல்லோரும் மகிழ்வாய்
திருமண வீட்டில்
தந்தை கடன் கவலையில்
கையில் வாங்கினான்
அருகில் ஈட்டிக்காரன்
ஊதியம்?
முரண்பாடு
யானைக் கறுப்பு
பேயரோ வெள்ளைச்சாமி
வந்த வழி தெரியாது
செல்ல வழி கிடையாது
காதல்
முயன்றதால் முடிந்தது
உழைப்பினால் உருவானது
குருவிக்கூடு
பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு
கண்ணால் காண்பதும் பொய்
தேயும் தேய்வதில்லை
நிலவு
அன்று கண்ணியம்
இன்று களங்கல்
கூட்டுறவு வங்கி
கொத்தனார் பணி
அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது
அதிசியம்தான்
கரிசல் பூமியில்
விளைந்தது வெண் பருத்தி
பயிர்களின் உயிர்
வளர்க்கும் உயிர்
மழை
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கைக்காட்சி
மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாதத்ற்க்காக
எருக்கம் பூ
புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்வாகும்
கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை
வனப்பை ரசிக்க
விழி இரண்டு போதாது
வண்ணமலர்கள்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு புதிய ஹைக்கூ
கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை
சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை
கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி
இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்
உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை
இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்
தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்