இசைக் குறள்

இன்பத்துள் இன்பம் இசையின்பம் அவ்வின்பம்
இன்பத்துள் எல்லாந் தலை .

சங்கீதம் யார்யார்வாய்க் கேட்பினும் அக்கீதம்
இங்கிதம் தானே தெளிவு .

சுருதிசேரா கீதம் அழகோ ? அழகே
சுருதிலயம் தப்பா இசை .

சுரமேழுள் நல்லிசைய டங்கும் அதுவும்
வரமாக வாணி அருள் .

உருகும் இதயமும் நல்லிசை கேட்க
மருகும் செவியுள் நுழைந்து .

தரங்கம் தவழும் அலைகளும் மீட்டும்
அரங்கினில் இன்னிசைக் கேட்டு .

பட்டும் நகைநட்டும் இல்லாத கச்சேரி
எட்டுத் திசையிலு மில் .

தப்பிய தாளமும் சேரா சுருதியும்
தப்பே இசையில் உணர் .

ருசிக்காது சாகித்ய மில்லா இசையும்
ரசிக்க முறையுடன் கல் .

இசையில் லயிப்பார் சிறப்பார் இலரே
வசையினில் வீழ்வார் வெறுப்பு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Dec-13, 11:44 am)
பார்வை : 224

மேலே