குவாண்டம் சன்னல்

"குவாண்டம் " சன்னல்
================================ருத்ரா

குவாண்டம் என்டாங்கில்மெண்ட்.
ஸ்க்ரோடிங்கரின் பூனைக்குள்
இறந்த பூனை ஒன்று
மியாவ் மியாவ் என்று
கத்திக்கொண்டே இருக்கிறது.
ஆற்றல் துகளை
அளவெடுக்கும்போதே
அது ஆவியாய் போய்விடுகிறதாமே.
இருக்கும் தடம் குறிக்கும் போது
குதிக்கும் தடம் மறைந்து போய்விடும்.
குதிக்கும் குதியை குறிக்கும்போது
குதிர்க்கும் இடம் குலைந்து போகும்.
ஹெய்ஸன்பர்க் சொன்னான்
கோடாங்கியிடம் குறி கேளுங்கள்
அகப்பட்டாலும் அகப்படும்
குவாண்டம் என்று.
அவன் அன்சர்டென்டி பிரின்சிபிளுக்கும் கூட‌
நோபல் பரிசு கொடுத்து விட்டார்கள்.
துகள் தடம்
இந்த இரண்டோடு பிசிறாய்
ஏதோ ஒட்டியிருப்பதற்கு
டெல்டா என்று கணக்கீடு செய்து
சமன்பாடு சொன்னான்
பரிசை வென்றான்.
புரிந்து கொண்டார்களா?
வேண்டாம்.
மண்டைக்குடைச்சல் யாருக்கு வேண்டும்?
பரிசை அவரே வைத்துக்கொள்ளட்டும்
நோபல் கமிட்டியார்
நோகத்தயாரில்லை.
விட்டார்களா விஞ்ஞானிகள்.
காலம் நகர்கிறது.
வெளியும் நகர்கிறது.
ஒரு பில்லியன் ஆண்டுகளையும்
ஒரு பில்லியன் மைல்களையும்
ஒரே விழுங்காய் விழுங்கி
அங்கே போன சுவட்டிலேயே
இங்கேயும் வந்து விடவேண்டும்.
இந்தக்கனவுக்கும்
இந்த நடப்புக்கும்
ஒரு கணக்கில் தீர்வு எழுதி
அந்த தீவு செல்ல‌
விஞ்ஞானிகள் தயார்.
இந்த பிரபஞ்சத்திலிருந்து
அந்த பிரபஞ்சத்துக்கு
ஊசி நூல் கோர்த்துக்கொண்டு
ஊடுருவ
அந்த "புழுத்துளை" மண்டலத்துக்கும்
ஒரு மண்டலம் விரதம் இருந்து
இருமுடி கட்டிக்கொண்டு
பயணத்துக்குத்தயார்.
"குவாண்டம் என்டாங்கில்மென்ட்."
பொதுச்சார்பு எனும் யானை
குவாண்டம் எனும்
எறும்புத்தோலை உரித்துப்பார்த்து
ஞானம் பெற‌
அதோ அந்த ஒளிவெளியில்
குவாண்டம் சன்னல்
திறந்து வைத்திருப்பதை பாருங்கள்.

=====================================

எழுதியவர் : ருத்ரா (10-Dec-13, 11:13 am)
பார்வை : 165

மேலே