கண்டேன் உலகை அவ்வவாறே
அடக்கம் காணேன் எங்கும்
அமைதி காணேன் இங்கும்
சாதனைகள் செய்வோர்
ஆட்டமும் பாட்டமும்
கலந்த அதிகாரம்
கண்டேன் இங்கும் அங்கும் .
கண்ணிலே நீர் எதற்கும்
முகத்திலே கவலை இதற்கும்
காரியம் கை கூடா விடில்
துயரம் அதி களவு பொங்க
நெஞ்சம் விம்மி வெடிக்க
கண்டேன் அதற்கும் இதற்கும் .
சீற்றம் எழும்பியது சட்டெ ன்று
சென்ற வழி திரும்பியது பட்டென்று
நினைத்தது நடக்கா விடில்
அடிதடியில் இறங்கி கலகம் கொணர
கொலை வெறியில் களமிறங்கி
கண்டேன் குருதியும் சாவும் ,
சுற்றுகிறது உலகம் எப்போதும்
பகலும் இரவும் மாறுகிறது எப்பொழுதும்
கடலும் கொந்த ளிக்கிறது அவ்வப்போதே
காற்றும் புயலாக சீறுகிறது சில நேரங்களிலே
நெஞ்சமும் ஏறி இறங்குகிறது எந்நேரமும்
கண்டேன் விநோதங்களை அந்தப் போதினில்