ஆமைகள்

இல்லாமை இயலாமை
இருக்கின்ற தென்று உணராமை
நில்லாமை நிலையாமை
நெஞ்சத்தால் நினைந்து பாராமை
கல்லாமை களியாமை
கற்றோரை கண்டு ஒழுகாமை
பொல்லாமை பொருக்காமை
பொல்லாத பேர்களை சேராமை

திட்டாமை தட்டாமை
திட்டங்கள் நன்றாய் தீட்டாமை
கட்டாமை காட்டாமை
கட்டுக்குள் வந்து அடங்காமை
எட்டாமை இயற்றாமை
இதயத்தில் அன்பை ஏற்றாமை
முட்டாமை முயலாமை
முடிவாக எதிலும் முனையாமை

பழியாமை இழியாமை
பரிகாச மின்றி சிரிக்காமை
விழியாமை விளங்காமை
விபரங்கள் தேடி திரியாமை
சுழியாமை சுணங்காமை
சுயமாக வாழ நினையாமை
மொழியாமை முகிலாமை
மொத்தத்தில் உனக்குள் நூறாமை

நூறாமை நூராமை
நுட்பமாய் இருக்கும் பொறாமை
தீராமை தேராமை
தினந்தோறும் காணும் மாறாமை
ஆறாமை அமராமை
அன்போடு இன்பம் காணாமை
பாராமை சாராமை
பாமரர் தேடலில் சோராமை!

குனியாமை நிமிராமை
குந்திய இடம் விட்டு நகராமை
தனிஆமை போலாயும்
தன்உறவை தேடி அலையாமை
சினிமாவை வாழ்வாக்கி
சீர்கெட்டத் தனம் மாறாமை
இனியாமை என்றறிந்தும்
இருக்கின்ற நிலை மாற்றாமை


துளங்காமை தொடங்காமை
துயரங்கள் கண்டு துடிக்காமை
விளங்காமை துலங்காமை
வேரோடு பிடுங்கி அழிக்காமை
முழங்காமை முட்டாமை
முன்னேற்றத் தடைகள் உடைக்காமை
வழங்காமை வருந்தாமை
**என்றே எங்கள
வாழ்கையும் என்றும் விடியாமை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Dec-13, 2:53 am)
பார்வை : 133

மேலே