உழைத்து வாழ் மனிதா

உழைத்து வாழ் மனிதா பிறரை உயர்த்திவாழ் மனிதா
உன்வாழ்வில் உயர்வதற்கு முந்திவா மனிதா
உழைக்க மறந்த உன்னால் உயரத்தான் முடியுமா
உண்மையை உணர்ந்து நீ வெளியில்வா மனிதா ......

படிப்படியாய் உயர்வதுதான் வாழ்க்கையின் தத்துவம்
எடுத்தவுடன் சிகரத்தை எட்டிடத்தான் முடியுமா
கடினமாய் உழைத்துவா கண்டிப்பாய் பலனுண்டு
பிறர்கண்ணெதிரில் நீகாணும் வெற்றியும் பலவுண்டு

பட்டை தீட்டாத வைரம்தான் பலபலக்குமா
பட்டறைக்கு போகாத கத்திதான் உருவம்பெருமா
உலைக்கு போகாததங்கம்தான் நகையாகுமா
உளிபடாத கல்தான் சிலையாய் மாறுமா .........

உட்கார்ந்தால் சிங்கத்துக்கும் உணவுதான் ஏதடா
நீ உருமிகொண்டிருக்கும் காரணம் என்னடா
நத்தைகூட நாளகணக்கில் நகர்ந்துதான் வாழுது
உயிருக்கு பயந்துதான் முயலுணவு தேடுது .........

சிறுகூட்டில் வாழ்கின்ற எறும்பைத்தான் பாரடா
சிறுகசிறுக சேர்த்துவைக்கும் உணவைத்தான் நாளைக்கு
பறவைகூட பலதூரம் கடந்துனவு தேடுது
நீ பார்த்திருந்தும் அறிவுனக்கு இயங்கிடத்தான் மறுக்குது

உட்கார்ந்து சாப்பிட்டால் உலகம்தான் ஏதையா
ஊர்முழுக்க உன்னைத்தான் கேலியாய் பார்க்குமே
கஷ்டப்பட்டு குடிக்கின்ற கஞ்சிகூட இனிக்குமே
காலாட்டி சாப்பிட்டால் காலம் உன்னை பழிக்குமே ....

உழைப்பொன்றே உயர்வுக்கு மந்திரம் என்பதை
உணர்ந்தவர் பலருண்டு நீவாழும் உலகினிலே
உழைப்பதற்கு துணிந்தவன் இழந்தது ஒன்றுமில்லை
உழைக்க மறந்தவன் இருந்ததாய் தடையமில்லே .....

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Dec-13, 12:35 pm)
பார்வை : 133

மேலே