ஏங்கித் துடிக்கிது மனசு
தவம் ஏதும் செய்யாமல்,
தப்பெதுக்கும் போகாமல்,
தவறாமல் பிறந்தன செல்வங்கள்.
எது வந்த போதும் பிள்ளைகள், நலமே பெரிதன்றே
பெரும் கனவோடு வளர்த்தனர் பெற்றோர்.
கல்வியே கடமை, கர்மமே பெரிதென்று,
கனவுகளோடு கல்வியும் வளர்ந்தது.
பெற்றவள் வழி காட்ட
சிறப்புத் தகுதிகளும் சேர்ந்தன.
பெற்றோர் ஏங்கும்,
பிள்ளைகளின் மண வாழ்க்கை .
பேரோங்கும் குடும்பத்தில்
பிறப்பொக்கும் சிறப்பாய்
பெரியோர் போற்ற சீராய் திருமணம். .
கூட இருந்து வாழ்ந்த குஞ்சுகள்
இரை தேடி புறப்பட்டன வெளி தேசங்களுக்கு
கண் காணா தேசத்தில்
வாழ்கை சிறப்பென்றாலும்
பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்ற பிள்ளைகளையும் ,
நேரில்பர்த்து கொஞ்சும் சுகம் இல்லை.
திருவும் புகழும் சிறப்பும்
நல் வாழ்வும் வளமும் பெற்று நிற்க, வாழ்க்கையின் கோடியில்
வழி காட்டி வளர்த்த பிள்ளைகளின்
கை பிடித்து நிற்க
ஏங்கித் துடிக்கிது மனசு