இனிப்புப் போளி

திருப்பதி லட்டா ? இது
புஷ்டியான பூந்தியா ?!

கர்ணனின் ஒரு கவச குண்டலமா ? இல்லை என்
காதலியின் மஞ்சள் முகமா ?

இனிய சந்தனம் பூசிய மொட்டை மண்டையா ? இது
இரவு விழியில் தெரியும் மஞ்சள் காமாலையா ?

என்ன வடிவம் கொடுப்பது இந்த
எழில் மஞ்சள் நிலவுக்கு என யோசித்தபோது

இனிப்பு போளி இந்தாங்க சாப்பிடுங்க
என மனைவி பறிமாற.......

மடித்துச் சாப்பிட்ட படி
மென்று கொண்டிருந்தேன்......

இனித்தபடி கரைந்து கொண்டிருந்தது என்
இதயத்தின் அருகிலே அந்த மஞ்சள் நிலா.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (12-Dec-13, 6:32 am)
பார்வை : 73

மேலே