ஒரு துளி ஆனந்தம்6
மகிழ்ச்சி என்பது
ஆனந்தத்தின் முதல் நிலை.
மகிழ்வான எண்ணங்கள்
ஆரோக்யமான
உயிர் வேதியியலில்
நம் உடம்பை வைத்திருக்கும்.
இதனால் நம்மை
அறியாமலேயே நம் உடம்பு
மறு சீரமைப்பு
நவடிக்கையில்
இறங்கிவிடும்
அப்போதுதான்
மன இறுக்கமும்
எதிர் மறை எண்ணங்களும்
விடை பெற்றுச் செல்லும் .
மன இறுக்கத்தை
வெளியேற்றி விட்டாலே ,
நமது கோவிலாகிய உடல் ,
எதற்காகப் படைக்கப்பட்டதோ,
அதற்கான வேலையை ,
கன கச்சிதமாக செய்யும்.
அத்தகைய இனிமையான
சுழலில் நாம்
ஆனந்த்தத் தை
நுகர ஆரம்பிக்கலாம்.
மின் சக்தி பற்றித் தெரியாமலேயே
எப்படி அதை அனுபவிக்கிறோமோ
அதைப்போல
ஆனந்தநிலையில்
தொடர்ந்து பிரவேசிக்கப்
பழகினால் சொற்களுக்குள்
அடங்காத அழகான ,
இனிய ,ஆனந்த அதிர்வுகளை
அனுபவங்களாக உணரலாம்.