எனைப்பெற்ற மகராசி
படிச்சி புட்டு
வேலை இல்லாம திரியுறான்னு
கால்கட்டு போட்டாத்தான்
சரி வருவான் என்று சொல்லி
எனக்கேற்ற துணையாக
ஒருத்தி வந்தாள்!
வேராக இருந்து கொண்டு
விழுதாக எனை மாற்ற
மாற்றி விட்டாள் என் மகனை
என்ற சொல் கேட்டு
கலங்கி தான் போனாள்!
விண்ணப்பம் ஒன்று கொடுத்துவிட்டேன்
ஆஸ்திக்கு ஒரு மகன் என
ஊரார்கள் சொல்ல
நானோ ஆசைக்கு ஒரு மகள்
என சொல்ல
என் ஆசையை புரிந்து கொண்டு
அழகான இளவரசியை
எனக்கு தந்தாள்!
அப்பப்பா....
அன்று கண்ட ஆனந்தம்
என்றுமே இல்லை!
என் தாயே பிறந்து விட்டாள்
என்று மருத்துவமனைக்கே
இனிப்பு வழங்கி
அவள் செய்யும்
ஒவ்வொரு செயலிலும்
என் தாயின் உருவம் கண்டேன்!
பருவ வயது வந்ததம்மா
பத்து பேரை முன் நிறுத்தி
பாக்கு வெத்தல மாத்தவச்சி
பக்குவமா புடிச்சி கொடுத்தேன்
மணவாளனின் கைகளிலே
எனைப்பெற்ற மகராசி
பல்லாண்டு வாழ்கவென்று...