வளர் பிறை -12
ஜெனியின் செயின் ஜோதி கையில்,,,,,,, மனதில் குழப்பத்தோடு தனது படுக்கையில் படுத்திருந்தாள் ஜோதி,,,,,,
அந்த இரவு அவளுக்கு குழப்பமானதாக இருந்தது,,,,
"இந்த செயின் எப்படி நம்ம பாக்கெட்ல வந்துது,,,, அந்த ரூம்ல நான் பாத்தது கனவா?? நெஜமா??,,, கனவா இருந்தா இந்த செயின் எப்படி வந்துருக்கும்,,,,, அப்ப நாம அங்க பாத்தது கனவு இல்ல,,,,, அங்கே என்னமோ நடந்து இருக்கு,,, அது என்னவா இருக்கும்? "- கேள்விகள் அவளை தின்று கொண்டிருந்தன,,,,,,,
தூக்கம் வரவில்லை,,,,,, மனிதர் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்,,,,,,,, யோசித்தவண்ணம் இருந்தாள் ஜோதி,,,,,
காற்றில் ஜன்னல் கதவுகள்,,,,,,
"தட,,,,தட தட,,,,,,,வென அடித்தது
மனமே இல்லாமல் எழுந்து சென்று கதவுகளை சாத்தி தாழிட்டாள்,,,,,
திரும்பி இரண்டு அடி தான் வைத்திருப்பாள் மீண்டும் ஜன்னல்,,,,, தட தட வென்றது
"என்ன இது தாழ்ப்பாள் போட்டேனே எப்படி திறந்தது"- கதவருகே சென்றாள் ஜன்னல் கதவு மூடி இருந்தது,,,, சத்தம் வேறு ஜன்னல் கதவுடையது,,,,,
"ம்ம்ம்ம் ச்சே அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"- அந்த ஜன்னல் நோக்கி நடந்தாள்,,,,
வெளிப்புறம் திறந்திருந்த ஜன்னல் கதவுகளை இழுக்க முயற்சி செய்தாள்,,,,,,,, அங்கே,,,,, கண்ணெட்டும் தூரத்தில்,,,,,,,,
"யாரது,,,,? யாரது....?" -ஜோதிக்கு அடையாளம் தெரியவில்லை இதுவரை பார்த்த முகமாகவும் இல்லை
அந்த விழிகள் ஜோதியையே பார்த்தது,,,,,,, அவளும் பார்த்தாள் வெளியே வா என்பது போல அந்த விழியின் அசைவுகள் சைகை செய்ய பிரம்மை பிடித்தவள் போல ஜோதி நடக்க ஆரம்பித்தாள்,,,,,,,,
அவளை தடுக்க யாருமில்லை,,,,, வாசல் கதவும் திறக்கபட்டது,,,, வெளியே வந்தாள்,,,,, ஜோதி அந்த உருவத்தை தொடர ஆரம்பித்தாள்
எங்கோ அந்த நரியின் ஊளை,,,,,,, ஆந்தையில் அலறல்,,,,,, இயற்கையாகவே பயந்த குணம் கொண்டவள் ஜோதி ஆனால் இப்போது அந்த பயம் எங்கே போனது,,,,,, ??
நேரங்கள் கடந்தன,,,,,,, நொடிகள்,,,, நிமிடங்களாயின ,,,,, நிமிடங்கள் ,,, மணியானது,,, முழுதாக ஒரு மணி நேரம்
மீண்டும் தன் வீடு வந்து சேர்ந்தாள் ஜோதி,,,,, என்ன ஆனது எங்கே போனாள்,,,,, அவளுக்கே புரியவில்லை,,,,,,, ஆனால் அவளின் மனம் சில மாற்றங்களை பெற்றது
வீட்டிற்குள் வந்தாள் ஜோதி,,,,,, ஜெனியின் செயின் கட்டிலில் இருந்தது,,, அதை கையில் எடுத்தாள்,,,, அவளின் கண்களில் கண்ணீர்,,,,,,, அதை தாண்டிய கோபம்,,,,,,,
நெஞ்சுக்கூடு தணலாய் கொதித்தது,,,,,, அந்த செயினை அணிந்து கொண்டாள்
கண்ணாடியின் முன் வந்து நின்றாள்,,,,,,,, கண்ணாடியில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
"ஜெனியின் முகம்"
அதையே வெறித்து பார்த்தாள் ஜோதி,,,, கண்ணாடியில் உள்ள ஜெனி பேசினாள்,,,,,,,,
"உன்ன விட மாட்டேன் டா,,,,,, விட மாட்டேன்,,,,,,,"
(வளரும் ,,,,,,,,,)