என் சுவாசம்
உயிரோடு உயிரானவளே,
உள்ளத்தில்
நிறைந்திருப்பவளே,
உதிரத்தில்
கலந்திருப்பவளே,
உணர்வுக்கு உயிரூட்டுபவளே,
சுவாசத்திற்கு வாசம்
தருபவளே,
என் நேசத்திற்கு உன்
நேசம் தருவாயா?
இல்லை,
நான்
பழகியது நட்பே என்பாயா?
நட்பு என்றால் உன்
திருமணம் வரை,
காதல் என்றால் நம்
கல்லறை வரை,
நான் காத்திருப்பேன்
என் உயிர் பிரியும்
வரை.