ஒரு வார்த்தை பேசாயோ

பசுமை மாறாத என்னவளே
கை பேசியே ஒலிக்காயோ
உந்தன் குரல் கேட்க வில்லை

ஒரு முறை உரையாடி விடுவாயோ
பேசாமல் நீயும் நானும் வார்த்தைகளில்
மெளனம் கொண்டே பதுங்கி இருப்பதேன்

வாய் வரை உன்னிடம் வந்து பேசத் துடிக்கும்
என் பல ஆசைகள் எல்லாம் ஏனோ மெளனம்
நீயோ என் மனதை புரிந்து கொள்ளவில்லையே

என் ஆசைகளை எனக்குள்ளே திணிக்கிறேன்
துயரம் கொண்டே மூழ்கித்தான் போனேனடி
தினமும் மூழ்கி முத்துகளை தேடுகிறேன்

என் வார்த்தைகளோ என்னிடம் போராட்டம்
எந்தன் உயிரே எங்கே .எல்லா நேரங்களிலும்
என்னை அழைப்பாய் இன்று ஏனோ அமைதியாய்

கண்ணே மெளனம் தொடர் மொழி பேசுகிறாய்
நானோ உன் குரல் கேட்கவே காத்திருக்கிறேன்
உன் அருகில் நானோ நீ பேசாமல் இருப்பதேன்

கனவில் என் கைபேசிக் காதல் காற்றிலே வந்து
உன்னை தொடாதா .இனிப்பாக தினம் பேசியனாய்
என் தங்கம் இன்று கசப்பாகி வெகுதூரம் சென்றாயோ

கலையே எங்கே வாழ்கையில் திசை மாறிப் போனாயோ
என் இன்பம் எல்லாம் தொலைத்தாயோ. என் மன செல்லாம்
உன்னிடமே பல நேரங்களில் என் மனசை தொட்ட காதலி நீ
அன்பே களைப்பாற சென்றாயோ .....இளைப்பாற சென்றாயோ

என்னை தூக்கி எரிந்து சென்றாயோ தீயில் விட்டு சென்றாயோ
அடிக்கடி இனிய ஸ்வரம் பாடியே என் நெஞ்சை தொட்ட காதலி
என் காதல் உன்னிடமே. நீ பேசாதா நிமிடம் கண்ணீரே இடியாய்
வலிக்கிற என் இதயத்துக்கு இதமாக ஒரு வார்த்தை பேசாயோ

எழுதியவர் : (13-Dec-13, 3:02 pm)
பார்வை : 170

மேலே