என் அம்மாவிற்கு சமர்ப்பணம்

அம்மா மறைந்ததும் எழுதிய ஆண்டு ஜூலை 1980.

நடந்து வந்த பாதைதனில்
சற்றே திரும்பிப் பார்கின்றேன்
எங்கள் குல நாயகியே
எனை விட்டுச் சென்றனையே.

பூமாலை வாங்கிவந்தால்
சிரித்து நீ அணிவாய்
இன்று பாமாலை நான் தொடுத்தும்
குலுங்கி நான் அழுதேன்.

அக்கினி சாட்சியாய் கரம்பிடித்துத்
தருவேன் என்றாய்
இன்று அக்கினிக்கு இறையாகும் காட்சி கண்டு
செயலற்று நின்றேனே.

உன் வயது பெண்டீரை
எங்கேனும் கண்டுவிட்டால்
உளம் வாடீத்துடிக்குதம்மா
உனைக் காண ஏங்குதம்மா.

வாவென்று அழைத்திடுவாய் இலையேல்
எனக்கேனும் மகளாய் நீ பிறந்திடுவாய்
வருவாய் நீ என எண்ணி
சற்றே திரும்பிப் பார்கின்றேன்.

(So I am a confident believer that a mother comes back as a daughter)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Dec-13, 1:40 pm)
பார்வை : 74

மேலே