வாழ்தலின் பொருட்டேஇந்தக் கவிதைகள்

கிழிக்கப் பட இயலாத
தேதி ஒன்றை...
என் இதயத்திற்குள் வைத்திருக்கிறேன்.
என் இதயத்தின்...
ஐந்தாம் அறையில்
வசித்துக் கொண்டிருக்கிறது அது.
**************************************************************
நான் எழுதும் கவிதை...
எனக்கும் முன்னே இருந்ததுதான்.

என்ன?
அதை நான்
என் வரிகளால் திருடியிருக்கிறேன்.
***************************************************************
இடைவெளிகளால்
நிரம்பிய காலத்தின்...
இந்த முனையில் நீ.
மறு முனையில் நான்.
கனவுகளால் கடந்து செல்கிறோம்.
வாழ்தலின் பொருட்டே வாழ்கிறோம்?
என்னும்...வாய்ச் சவடாலில் மட்டும்
குறைச்சலே இல்லை இன்றும்.
*********************************************************************

எழுதியவர் : வாழ்க்கை (14-Dec-13, 5:06 pm)
பார்வை : 126

மேலே