எமைப்போல் நீயும் முட்டாள் ஆகிவிடாதே …

எதிர்காலம் எதிர்காலமென
நிகழ்காலம் தொலைக்கின்றாய் …
நாளையநாள் வாழ்வதற்காய்
இன்றையநாள் இழக்கின்றாய் …

அறுபதில் மாத்திரைக்காய்
இருபதினில் உழைக்கிறாய்…
மறுநிமிடம் நிச்சயமோ
என்பதனை மறந்துவிட்டு
உலகெல்லாம் உடமைக்காய் ஓடுகிறாய் …

கண் விழித்தாய்
கடல் கடந்தாய்
உடமை அடைந்தாய் …
ஆனால்
ஆயுள் இழந்தாய்
உறவை இழந்தாய்
உண்மை நட்பை இழந்தாய்
அன்பெனும் குடும்பம் இழந்தாய்

கொஞ்சும் மழலைக்கு தந்தையில்லை !!
பெற்ற தாய்க்கு கொள்ளியிட பிள்ளையில்லை !!
கரம்பிடித்த மனைவிக்கு துணையில்லை !!
உழைத்த பணமிருந்து என்ன பயன் ???

ஒவ்வொரு துளியாய் நீ சேர்த்த செல்வமெல்லாம் …
நிச்சயமோ உன் ஆயுளெல்லாம் நிலைத்திடவே ???
ஒருநிமிடம் போதாதோ அதை இழக்க..?

நீ மரிக்க சேரும் ஒருகூட்டம் அழுகையோடு …
நீ சேர்த்த செல்வமெல்லாம் அவருடமை எனக்கூவும்...

இன்றைய நாள் உன்நாளே ...
நாளைய நாள் சொந்தமில்லை …
சென்றநாளோ உனக்குரிமையில்லை....
திரும்பிப் பெற வழியுமில்லை …
இழந்துவிட்டு அழுவதினால் என்னபயன் …?

கையினிலே செல்வம் கொண்டு...
நெஞ்சினிலே அன்பிற்கு ஏழையானாய் …
தான் பிறந்த காரணத்தை மறந்து விட்டாய் …
முட்டாள் ஆகிவிடாதேதோழமையே…

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (14-Dec-13, 5:46 pm)
பார்வை : 372

மேலே