மௌனத்தில் ஒளிந்துகொள்கிறாய்...!!!!
எப்பொழுதும்போல்
இப்பொழுதும்
மௌனத்தில் ஒளிந்துகொள்கிறாய்
உனக்கேன்
மௌனம் இத்தனை
பிடித்திருக்கிறது
உனக்கேன்
மௌனத்தின் மீது இத்தனை
நம்பிக்கை
எப்பொழுதும்போல்
என் கேள்விகள்
உன் மௌனத்தின்
திரைசீலையைக்கூட
தாண்டுவதில்லை
உன்
மௌனத்தை எதைக்கொண்டு
உடைப்பதெனவும் தெரியவில்லை
ஆனாலும்
ஏதோ ஒரு
நம்பிக்கையில்
உன் மௌனத்தின் வாசலில்
நிற்கிறேன்
மறக்காமல்
மௌனத்தின் கதவுகளையும்
தட்டிச்செல்கிறேன்
எப்பொழுதாவது திறந்துவிடுமென....!!!!

