நிம்மதி எங்கே இருக்கிறது
உன்னுள்ளே ஒளிந்திருக்கும் தீபமது நிம்மதி
நீ உணர்கையிலே ஒளிர்கின்ற தீபமது நிம்மதி
தியாகங்கள் செய்திடவே ஒளிவிடுமே நிம்மதி
தீஞ்செயல்கள் அடக்கிடவே ஒளிர்ந்திடுமே நிம்மதி
ஆசைகளை அடக்கிடவே பிறந்திடுமே நிம்மதி
அடுத்தவரை போற்றுதலில் கிடைத்திடுமே நிம்மதி
ஆணவத்தை அடக்குதலில் பிறந்திடுமே நிம்மதி
அகங்காரம் அழித்தலிலே கிடைத்திடுமே நிம்மதி
பேராசை அடக்கிவிட்டால் பிறந்திடுமே நிம்மதி
பெரும்கோவம் கொன்றுவிட்டால் கிடைத்திடுமே நிம்மதி
உனதென்று மறந்துவாழு நிலைத்திடுமே நிம்மதி
பிறர் நிலைஉயர உதவிபாரு தழைத்திடுமே நிம்மதி ..........
காசுபணம் சேர்த்தவர்க்கு கிடைப்பதில்லை நிம்மதி
கட்டுகட்டாய் பணமும் நகையும் தருவதில்லை நிம்மதி
கடவுள்தரும் வரமில்லை உன்கய்யிலுள்ள நிம்மதி
கண்மூடி அறிவைக்கேலு பிறக்குமிந்த நிம்மதி ........
எதுகிடைத்தும் அலைந்திட்டால் என்றுவரும் நிம்மதி
நீ இருப்பதிலே மகிழ்ச்சிகண்டால் உன்னுடனே நிம்மதி
திருப்பதியோடு வாழும்வாழ்வே நீதேடும் நிம்மதி
திருந்திவிடு கிடைத்திடட்டும் இனியாவது நிம்மதி ..........