அடிமை பெண்ணாய்
ஓடும் பேருந்தில் கற்பழிப்பு ,
ஓடும் ரயிலில் கற்பழிப்பு,
பள்ளியறையில் கற்பழிப்பு,
அலுவலகத்தில் அத்துமீறல் ,
கோவிலில் மானபங்கம்,
காவல் நிலையத்திலும் காவல் இல்லை....
எங்கே போவாள் என் சகோதரி..
எங்கேயும் இல்லை பாதுகாப்பு....
மாமிசம் உண்ணும் விலங்குகளாய்
எங்கேயும் சதை வெறி பிடித்த மனிதர்கள்...
இந்த கொடுமைகளை காண்கையில்
பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
கல்வி தேடி கல்லூரி செல்லும்
என் சகோதரி
பெண்மையின் புனிதம் தெரியாத பாவிகளிடம்
சிக்கி, சீரழிந்து செத்து மடிவதை விட
அவள்
அடுப்படியில் கிடக்கும் அடிமை பெண்ணாகவே
இருக்கட்டும் மானத்தோடு....
என்றே தோன்றுகிறது....