விருதுகள்-2013 உரைநடை வேந்தன் -2013

தோழமைகளுக்கு வணக்கம்...

கதை ,கவிதை,கட்டுரை ,நகைச்சுவை.....என பல பிரிவுகள் நமது தளத்தில்...புதியதாக எண்ணம் மற்றும் கேள்விபதில் .....இப்படி பல் வகையிலும் தளம் தமிழை வளர்ப்பதோடு படிப்பாளிகள படைப்பாளிகள் என பலரை வளர்த்து வருகிறது...மகிழ்ச்சி நமக்கு அல்லவா..

இவ்வகையில் உரைநடை என்பதில் படிப்பவருக்கு ஆர்வம் மேலோங்க செய்வது ஒரு கலை...தவம்...வரம்...பலருக்கும் கை கூடுவதில்லை ...சிலருக்கு கைவிட முடிவதில்லை...

உரைநடையில் என் நெஞ்சம் கவர்ந்தவர்கள் மூவரே...பிரபஞ்சன்....ராமகிருட்டிணன்...அடுத்து நமது தளத்தில் உள்ள தோழர்...

இவரின் பல படைப்புகளை நான் உள்வாங்கி பல காலம் அசை போடுவது உண்டு...மேடைகளில் இவரின் எழுத்து பற்றியும் கூறுவதுண்டு...

ஆற்றொழுக்கு நடை...குறைவான சொற்கள்.. நிறைவான ஆழம்...நல்ல கரு தெரிவு...கதையிலும் கவிதையிலும் இவை எளிதாக பலருக்கும் கைகூடுவது இயல்பு.அன்றியும்....(இப்போதெல்லாம் இளைஞர் மத்தியில் சொல்லப்படும் "தூய தமிழ் பதமான "-நோ சான்ஸ் ....சான்சே இல்லை...என்றும் சொல்லலாம்..)....கட்டுரையில் மிக அரிது...இவருக்கு இது ஆகி வந்துள்ளது...

2014ஆம் ஆண்டின் முதல் விருதாக 2013ன் "உரைநடை வேந்தன்-2013 "எனும் விருதினை இவருக்கு அளித்து வாழ்த்துவோம் வாருங்கள்...

அவர் யார்...?

****************************************************************************

நமது தோழர்.எஸ்.தேவா.......

$$$$$$$$ தளத்தின் 2013 ஆம் ஆண்டின்
@@@@@@@ "உரைநடை வேந்தன்-2013 " @@@@

****************************************************************************
விருது பெறும் எஸ். தேவா நமது வாழ்த்துதலுக்கு உரியவர்...

எழுதியவர் : அகன் (15-Dec-13, 10:59 am)
பார்வை : 176

மேலே