அத்த மவனே

அத்தபெத்த மவனே அத்தானே
பித்தான என்மனசுப் புரியாதா ?
ஒத்தயில விட்டுபுட்டுப் போனாயே
குத்தமென்ன கண்டுபுட்ட சொல்லிவிடு ??

உத்ததுணை யாயிருப்பே னுதானே
பெத்தவளும் கட்டி வச்சா
சொத்து வெளிய போகுமேனு
சேத்துக்கிட்ட என்னயும் நீதான் ....!!

ரத்த சொந்தம் வேணாமுன்னு
மெத்த படிச்சவுக சொன்னாக
பித்துபுடிச்சு என்னையே தான்
உத்தமனே தாலி கட்டிபுட்ட....!!

பெத்தபுள்ள கொறையா பொறக்க
மொத்த காரணம் நாந்தானா ?
தத்தளிக்கேன் கரையில மீனா
பத்திரமா கர சேப்பாயா....??

மத்தளத்து ரெண்டுபக்கம் போல
நெத்தம் அடி படுகிறேனே
சத்தங் காட்டாம அழுவுறேனே
புத்தி கெட்டு போவதேனோ .....???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Dec-13, 6:54 pm)
பார்வை : 249

மேலே