சிலப்பதிகாரம்

கனலை விழிகளில் மூட்டி-தன்
கற்பு நிலைகாட்டிய பெருமாட்டி
மாதர்குலப் பெருமை நிலைநாட்டிய
மங்கைப் பெருந்தெய்வமே போற்றி!

கண்களில் கருணையுடன் கண்ணகித் தாய்
தன்னையே பொன்னென குணத்தீபமென
பொறுமை அணியென அறமே ஆடையென
போற்றி வாழ்ந்த பொன்னரசி புகழ் வாழ்க!

சிலம்பிலுள்ள மாணிக்கப் பரல்களைப் போல்
சீரியத் தமிழில் கவிக்கோமான் இளங்கோவும்
சிலப்பதிகாரம் காப்பியம் தந்தான் -அதில்
செங்கோலேந்தும் அரசர்க்கு நீதி சொன்னான்!

விரிந்த ஆழிக்குள் மூழ்கி-அந்த
அகண்ட வானத்தில் பறந்து மிதந்து
கற்பனை நுலால் கவிமலர் கோர்த்தான்
காவியம் சமைத்தான் வாழ்க!

எழுதியவர் : விஷ்ணுதாசன் (22-May-10, 5:07 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
பார்வை : 709

மேலே