நான் என்ன எழுதுகிறேன்

என் தோழமைகள் அனைவருக்கும் என் வணக்கம்! நான் என்ன எழுதுகிறேன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சமர்ப்பிக்கிறேன் ! இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் என்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ கேட்கலாம் உங்களது கேள்விகளுக்கு நான் பதிலளிக்க கடமைப் பட்டுள்ளேன் நீங்கள் சரமாரியாக கேள்விகள் கேட்கலாம் எந்த கேள்விகள் (கட்டுரையைப் பற்றி) கேட்டாலும் பொறுமையாகவும் விரிவாகவும் பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ளேன் , என்னிடம் கேட்கப் படும் கேள்விகள் ஒரு வேளை என் தோழமை நட்புகளுக்கு பிடிக்காத கேள்விகளாக இருக்கலாம் அப்படி இருந்தால் என் நட்புகள் அதைப் பற்றி வருத்தப் படவோ கோபப் படவோ யாரிடமும் மறு கேள்விகள் கேட்கவோ வேண்டாம் நான் அவற்றிற்கு பொறுமையாக பதில் சொல்கிறேன் .
மேலும் எல்லா பதிவுகளையும் நுனிப்புல் மேய்வது போல இதையும் படித்து விட்டு அருமை, நன்று, நல்ல பதிவு என்று சொல்வதை நான் விரும்ப வில்லை உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் மிகவும் மதிக்கிறேன் ,எதிர் பார்க்கிறேன் .
நான் என்ன எழுதுகிறேன் என்று ஒவ்வொரு நாளும் நான் நினைத்துப் பார்க்கிறேன் இந்த "நான்" என்று சொல்லும் போது அது என்னை மட்டும் குறிப்பதாகக் கருதுகிறேன் வேறு யாரையாவது நான் குறிப்பிடுவது போல் தோன்றினால் அவர்கள் அவர்களை சுய பரிசோதனை பண்ணிக் கொள்ள இது உதவும் என்றும் நினைக்கிறேன்.
ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியாத காரியத்தை ஒரு எழுத்து சர்வசாதாரணமாக செய்து முடித்துவிடும் என்பது என் கருத்து ,நான் எதற்கு என் கையில் எழுது கோலை எடுத்தேன் என்பதை முதலில் நான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் ,ஒரு சிலர் சமுதாயத்திற்காக எழுதுகிறார்கள் ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதற்காக எழுதுகிறார்கள் ,ஒரு சிலர் தான் சொல்ல விரும்பும் கருத்து மற்றவர்களிடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக எழுதுகிறார்கள் ,இன்னும் ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக எழுதுகிறார்கள் ,இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக எழுதுகிறார்கள்,நானும் எழுதுகிறேன் எதற்காக என்றால் என் எழுத்து மூலம் ஒரு மனிதராவது தன்னை சுய பரிசோதனை செய்ய மாட்டாரா அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் வராதா? இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றம் வராதா ?ஏன் நானே ஒரு நல்ல தொலை நோக்குப் பார்வை உடையவராக மாறி விட மாட்டேனா என்ற எண்ணத்துடன் தான் ,
என்னுடைய எழுத்துகள் சாமானிய மக்களிடமும் சென்று சேர வேண்டும் நான் நுழைய முடியாத இடங்களிலும் கூட என் எழுத்துகள் சென்று சேர வேண்டும் நான் சொல்லும் கருத்துக்கள் ஒரு மனிதருடைய வாழ்விலாவது நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எழுதுகிறேன் இப்போது ஒரு கேள்வி எழலாம் அப்படி என்றால் நீங்கள் உங்கள் எழுத்துக்கு யாரவது பணம் தந்தால் வாங்க மாட்டீர்களா என்ற கேள்வி எழலாம், எப்பொழுது என்னுடைய எழுத்துக்கள் மூலம் தான் நான் வாழ வேண்டும் என்ற நிலை வருகிறதோ எப்பொழுது என்னுடைய எழுத்துக்கள் மூலம் பலர் லாபமடைகிறார்களோ அன்று நான் இதைப் பற்றி யோசிப்பேன் ,
ஒரு எழத்தாளர் தன்னைப் பல கோணங்களில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ,எதைப் பற்றி எழுதுகிறோமோ அதைப் பற்றின ஆழ்ந்த சிந்தனையும் தீக்கமான பார்வையும் பல கோணங்களில் சிந்திக்கும் திறமையும் இருக்க வேண்டும் ,முதலில் ஒருவருடைய படைப்பு என்பது கர்பத்தில் சுமக்கும் கருவுக்கு சமமானது , அந்த படைப்பு வெளி வரும் போது அது ஒரு குழந்தைக்கு சமமாகவே பாவிக்கப் படுகிறது ,இதில் அந்த படைப்பாளி ஒரு தாயாகவே மாறி விடுகிறார்,
ஒரு படைப்பைப் பற்றி பாராட்டும் போது இனிய முகத்துடன் ஏற்றுக்கொள்பவர் அதைப் பற்றி தூற்றும் போதும் அதை ஏற்றுக் கொள்ள கூடிய பக்குவம் இருத்தல் வேண்டும் அந்த படைப்பைப் பற்றி யார் என்ன கேள்விகள் கேட்டாலும் அதற்கு சரியான விளக்கம் கொடுக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும் ஏனென்றால் ஒவ்வொருவருடைய பார்வையும் மாறுபட்டக் கண்ணோட்டத்தில் இருக்கும் அதற்கு சரியான விளக்கம் அளிக்கப் பட வேண்டும் ,எதிர் கேள்வி கேட்காமல் யாரும் விமர்சிக்கப் பட முடியாது அதற்காக கோபப் படவோ சண்டை போடவோ கூடாது என்பது என் கருத்து .
................................தொடர்ந்து பார்க்கலாம் !
....................வாழ்க வளமுடன் !!!
.....................சஹானா தாஸ் .