வரலாறு படைப்போம்
சிகரங்கள் அழைகின்றன!
உன் சிறகுகளை சரி செய்து கொள் தோழனே!
சொற்ப தூரம் சென்று விட்டு
சொர்கத்தை தேடாதே!
சோர்ந்து விடாதே!
கரைய கரைய தான் கற்பூரமும் ஒளிரும்
தேய தேய தான் சந்தனமும் மணக்கும்
உடல் வலிக்க உழைத்து பார்!!
மன வலிமையோடு துணிந்து நில்!!
உன் வேர்வை துளி கொண்டு உன் வெற்றி கணக்கிடப்படும்!
வீழ்ந்தால் மரணம் மட்டுமே
வாழ்ந்து காட்டினால்
வரலாறு!
புதியதோர் வரலாறு படைப்போம்!!